புகையிரத பாதைகளில் இரும்பு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவை, கொரலவெல்ல, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் அதிகளவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை புகையிரத பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
புகையிரத பாதுகாப்பு ஊழியர்களின் பற்றாக்குறையே இந்த நிலைமைக்கு காரணம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையால் புகையிரத விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
Tags:
sri lanka news