வடக்கில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழை..!!!


அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகள் கனமழையை பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முல்லைத்தீவுக்கு கிழக்கே 300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்துவரும் 36 மணி நேரத்திற்குள் வடமாகாணத்தில் இடி மின்னலுடன் கூடிய மழையாக இருக்கும் என்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும் என அறிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here