காலிமுகத்திடல் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது..!!!


ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் இளைஞர்கள் ஆரம்பித்த மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

நேற்று காலை 9 மணியளவில் திரண்ட இளைஞர்கள் உள்பட பெருந்திரளான மக்கள் கோஷங்களை எழுப்பியும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் நேற்று இரவு விளக்கேற்றியிருந்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக இன்றும் நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதிக்கு ஆதரவாக கண்டி மற்றும் தங்காலையில் போராட்டங்கள் இடம்பெற்றன
Previous Post Next Post


Put your ad code here