தேசிய ரீதியில் யாழ். மண்ணிற்கு பெருமை சேர்த்த வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்கள்..!!!


கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்துகொண்ட யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் முதலிடத்தை தட்டிச் சென்றது.

பின்னர் அதன் இறுதிப் போட்டியானது கடந்த 23.04.2022 அன்று கொழும்பு – லோறன்ஸ் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு கொழும்பு பம்பலப்பிட்டி இந்து பாடசாலை தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது

சி.கேசவன், ர.துலக்சன், இ.அஸ்வின், ந.பிருதிக்சா ஆகிய மாணவர்களே வட்டுக்கோட்டை இந்து கல்லூரி சார்பில் கலந்துகொண்டு யாழ். மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு, சான்றிதழ்கள், நூற் பரிசு மற்றும் வெற்றிக்கேடயம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.





Previous Post Next Post


Put your ad code here