ஆசிரியர்கள், அதிபர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு..!!!


நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கோரி, நாட்டில் உள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரும்போது பொருளாதார ரீதியாகவும் போக்குவரத்து ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“தற்போதைய நிலமைக்கு தீர்வாக பாடசாலை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறும் ஆசிரியர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அதனை செய்ய மறுத்துள்ளனர்” என்று ஆசிரியர் ‘அதிபர்கள்’ தொழிற்சங்கக் கூட்டணி கூறுகிறது.

இதனையடுத்து, நாட்டில் நிலவும் சிரமங்களுக்கு நீதி கோரி நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் ‘அதிபர்கள்’ தொழிற்சங்கக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here