நடிகர் விஜய்சேதுபதி, நடிகைகள் சமந்தா, நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி நயன்தாரா, அனிருத் இணைந்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் சமந்தாவும் மற்றுமொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் திகதி வெளியாகிறது.
Tags:
cinema news