கடலோர புகையிரத சேவைகள் தாமதம்

 


தண்டவாளம் சேதமடைந்ததால் கடலோரப் புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அம்பலாங்கொட மற்றும் பலபிட்டிக்கு இடையிலான புகையிரத பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு கோட்டையில் இருந்து பெலியத்த நோக்கி பயணத்தை ஆரம்பித்த புகையிரதம் தற்போது பலபிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

புகையிரத பாதையை புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here