நாட்டிலுள்ள கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
குறிப்பாக சுகாதாரத்துறையைப் பொறுத்தமட்டில், நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் நடத்தப்பட்டுவந்த பொதுமக்கள் போராட்டத்திற்குள் இன்று திங்கட்கிழமை நுழைந்த அரச ஆதரவாளர்கள், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்களை மிகமோசமாகத் தாக்கியதுடன் அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களுக்கும் தீமூட்டினர்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத்தாக்குதல்களுக்குத் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் நாடளாவிய ரீதியில் இயங்கிவரும் பல்வேறு துறைசார்ந்த சுமார் 1000 தொழிற்சங்க ங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news