யாழில் 106420 குடும்பங்களுக்கு உதவித்தொகை..!!!


106420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், வருமானம் குறைந்த மக்களுக்கு தற்பொழுது வழங்கப்படுகின்ற தொகையை விட மேலதிகமான தொகையைச் சேர்த்து தலா 5,000 ரூபாய் வழங்குவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 78,442 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும் 27,978 வறிய குடும்பங்களுமென மொத்தமாக 106420 குடும்பங்கள் அந்த நன்மையைப் பெறும்.

இதற்கான ஏற்பாடுகளை சமுர்த்தி திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில் அந்த நிதி கிடைத்தவுடன் மே மற்றும் யூன் மாதங்களில் அந்த கொடுப்பனவு கிடைக்கும் என்றார்.


Previous Post Next Post


Put your ad code here