
அகதிகளாக தமிழகத்திற்கு செல்ல முற்பட்ட மேலும் 12 பேர்
தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 வயது சிறுமி உள்ளிட்ட 10 பேர் நேற்றிரவு 8.15 அளவில் தலைமன்னார் பியர் கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 ஆண்கள் அடங்குவதுடன், இவர்கள் அனைவரும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழகத்திற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 2 பெண்கள் ,நேற்று பிற்பகல் தலைமன்னார் ஊருமலை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேரும் இன்று அதிகாலை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news