20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி..!!!


உலகளவில் இதுவரை 20 நாடுகளைச் சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதியாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மே மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பரவியிருந்த நிலையில் பிற நாடுகளுக்கும் இந்நோய் பரவி வருகிறது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் இந்த நோயினால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், உலகளவில் 20 நாடுகளைச் சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் பரவியுள்ளதும் மேலும் சந்தேகிக்கப்படும் 100 பேருக்கு தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கனடாவில் இந்த நோயிற்கான அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ததில் அவர்களில் 18 பேருக்கு குரங்கம்மை நோய் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பல வாரங்கள் கழித்தே இதிலிருந்து குணமடைகின்றனர். அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பு நிகழ்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், இந்த நோயால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கா நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது.

இந்த நோய் குறைந்த அளவிலேயே பரவும் தன்மை கொண்டிருந்தாலும் பாலியல் உறவுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here