Saturday 28 May 2022

உலகளாவிய ரீதியில் கொரோனாவால் இதுவரை 63 இலட்சம் பேர் பலி ; 53 கோடி பேருக்கு தொற்று..!!!

SHARE

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி ஈடுபட்டு வருகின்றன.

இந்த 3 ஆண்டுகளாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 இலட்சத்தை கடந்துள்ளது.

இத்தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,309,337 பேரை தாக்கி கொன்றுள்ளது.

இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 530,776,205 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 501,288,273 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 23,178,595 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.

அமெரிக்காவில் 85,698,976 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 97,378 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,031,216 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 261பேர் உயிரிழந்துள்ளனர்.

நம் நாட்டை பொறுத்தவரை, 663, 800 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

இதுவரை 16,514 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 646,947 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
SHARE