9ஆம் திகதி வன்முறை தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல்..!!!




கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த நெருக்கடியான சூழ்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொள்ளையடித்தவர்கள் மற்றும் சொத்துக்களை திருடியவர்கள் குறித்த தகவல்களை பெற்றுத்தருமாறு குறித்த அறிவித்தல் ஊடாக பொலிஸார் கோரியுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தகவல்களை பெற்றுக் கொடுப்பதற்காக 1997 மற்றும் 119 என்ற இரண்டு தொலைபேசி இலக்கங்களை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here