
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டுள்ளார்.
அமெரிக்க தூதுவர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
Tags:
sri lanka news