மாமரத்திலிருந்து தவறி வீழ்ந்த குடும்பத்தலைவர் உயிரிழப்பு..!!!


மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது- 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

மாமரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி கொப்பு வெட்டும்போது அவர் நின்ற கொப்பு முறிந்ததால் தவறி வீழ்ந்துள்ளார்.

கீழே வீழ்ந்து சுயநினைவற்றுக் காணப்பட்ட அவரை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்த்த போதும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.


Previous Post Next Post


Put your ad code here