
அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக நாளைய தினம் (மே 4) தனது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
Tags:
sri lanka news