முதன்முறையாக ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்..!!!


பல்கலைக்கழகங்க பிக்கு சம்மேளனம் இன்று (03) கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது.

விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த போராட்டம் ஆரம்பமாகி இருந்தது  உலக வர்த்தக மையத்திற்கு அருகே அமைந்துள்ள பொலிஸ் வீதித் தடையை அகற்றி முன்னோக்கி நகர்ந்த பேரணி
மத்திய வங்கிக்கு அருகாமையில் இருந்த வீதித் தடையையும் அகற்றி ஜனாதிபதி மாளிகையை நெருங்கினர்.

இதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்க பிக்குகள் சம்மேளனம், பின்னர் காலி முகத்திடல் போராட்ட பூமிக்கு பேரணியாக சென்றது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இவ்வாறானதொரு குழுவினர் போராட்டம் நடத்துவது இதுவே முதன்முறை என  செய்தியாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here