நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அனிருத் காம்போவில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்கள் அனைத்தும் வழக்கம்போல் ஹிட் அடித்துள்ளன. படம் மே 13-ம் தேதி வெளியாகவுள்ளதால், படத்துக்கான விளம்பரப் பணிகளில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
டாக்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Tags:
cinema news