நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் அரசாங்கம் தயார்..!!!


அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவருமானால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் பிளவு காரணமாக அந்த யோசனையின் ஊடாக அவர்களின் எதிர்ப்பார்ப்பை அடைய முடியாதென ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகருக்கு கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மேதின ஊர்வலத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மக்கள் பிரதிநிதிகளாக, மக்களின் வாக்குகளில் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள், மக்களின் மேம்பாட்டிற்காக செயற்படுகிறார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்று காணப்படுதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here