சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையை வழங்கல் தொடர்பில் (02) நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் அடிப்படையில் கிடைக்கப்பெற்றுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் கீழ் டீசல் மற்றும் பெற்றோல் கொள்வனவு செய்வதற்கான 04 பெறுகைகளுக்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை வரையறுக்கப்பட்ட இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
Tags:
sri lanka news
