வாழ்க்கைச் செலவு – துரித முதலீட்டு வாய்ப்புக்கள்..!!!






வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்வதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதியின் தலைமையில் பிரதமர் மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பங்கேற்புடன் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக துரிதமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்காக கீழ்வரும் அமைச்சர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கலாநிதி. நாலக கொடஹேவா
வெகுசன ஊடக அமைச்சர் – தலைவர்
கௌரவ திலும் அமுனுகம
போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர்
கௌரவ கஞ்சன விஜேசேகர
எரிசக்தி அமைச்சர் மற்றும் மின்வலு அமைச்சர்
பிரமித பண்டார தென்னகோன்
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்
லொஹான் ரத்வத்த
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
Previous Post Next Post


Put your ad code here