குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி..!!!




நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்புப் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு துரிதமாக உதவி வழங்க வேண்டிய தேவையை அரசாங்கம் அடையாளங் கண்டுள்ளது.

உலக வங்கிக் குழும நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கருத்திட்டமான குறிப்பீடற்ற துரித பதிலளிப்பு பிரிவின் மூலம் அதற்கான நிதி வழங்குவதற்கு உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய, அடையாளங் காணப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு மே மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை குறித்த உதவிகளை வழங்குவதற்கான விசேட கொடுப்பனவு நடவடிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here