Wednesday 25 May 2022

இன்றைய தினமும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது..!!!

SHARE

இன்றைய தினமும் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2,3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இன்றைய தினம் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினமும் லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE