யாழ்.போதனா வைத்தியசாலையில் A+ வகை குருதிக்கு தட்டுப்பாடு..!!!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் A+ வகை குருதிக்குத் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக கடந்த 8 ஆம் திகதிக்குப் பின்னரான இரத்ததான முகாம் நிகழ்வுகள் இடை நிறுத்தப்பட்டது.

இதனால், நேரடியாக இரத்த வங்கிப் பிரிவிற்கு வருகை தந்து இரத்ததானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே, குருதிக் கொடையாளர்களை இரத்ததானம் வழங்க முன்வருமாறும், குருதிக் கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


Previous Post Next Post


Put your ad code here