சகல நீதிபதிகளின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த பிரதமர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு..!!!


நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளினதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தகவலை பிரதமரின் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

கடுவெல நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதிச்சேவை சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தகவல் மற்றும் சட்ட மா அதிபரினால் பிரதமரின் கவனத்திற்கு இன்று (2022.05.07) கொண்டு வரப்பட்டது.

அது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

கடுவெல நீதிவான் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பாதுகாப்பையும் நீதிபதிகளின் பாதுகாப்பையும் உடனடியாக பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்று ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here