சாதாரண தரப் பரீட்சைகளுக்காக மின்வெட்டு நேரத்தில் மாற்றம்..!!!


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்காக பிரத்தியேக மின்வெட்டு அட்டவனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு இருக்காது, எனவும் மேலும், மே 22 திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை மற்ற நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு இருக்காது, எனவும் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தொழில் வலயம் மற்றும் கொழும்பு நகர வர்த்தக வலயம் தவிர்ந்த பரீட்சைகள் இடம்பெறாத நேரங்களில் பகல் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரை மின்சாரம் தடைப்படும்.

அத்தோடு கைத்தொழில் வலயங்கள் (காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை) மற்றும் கொழும்பு நகர வர்த்தக வலயத்தில் (காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை) அந்த நாட்களில் 3 மணி நேர மின்வெட்டு ஏற்படும் எனவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here