
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னர் அறிவித்திருந்தது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டமைக்காக தமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news