போராட்டங்கள் மீதான தாக்குதல் - பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை

 


அலரிமாளிகைக்கு முன்பாக மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீதான தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.


சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 22 பேரின் பட்டியலை அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கமாறும், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளுக்கு அமைய தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here