கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!!!


கொழும்பு காலிமுகத்திடன் பகுதியில் கோட்டா கோ கமவில் இன்று (18) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது.

அனைத்து இன மக்களும் இந்ந நினைவேந்தலில் பங்குபற்றி கடந்த 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இறுதியுத்தம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றமை இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளதாக நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இப்போதுவரை நீதி வழங்கப்படாத தமிழினப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று மே 18 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இடம்பெற்றது.



Previous Post Next Post


Put your ad code here