
எரகம - வானேகமுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும் சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (06) பிற்பகல் குறித்த இரு பிள்ளைகளும் நீராட சென்ற போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 6 வயது சிறுவனும் 9 வயது சிறுமியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு பிள்ளைகளும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news