கொழும்பில் நடைபெறும் மே தின பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்கப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (01) நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனால் வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலவும் சூழ்நிலை காரணமாக இன்றைய தினம் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு விஜயம் செய்ய வேண்டாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
sri lanka news
