குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் டிபென்டர் வாகனம் ஒன்று மோதுகின்ற விதம் டிபென்டர் வாகனத்தில் பயணித்த நபரின் தொலைபேசியில் பதிவாகியுள்ளது.
VIP வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்விளக்கை ஔிரவிட்டவாறு டிபென்டர் வாகனம் அதிவேகமாக பயணிப்பததை குறித்த காட்சிகள் ஊடாக அவதானிக்க முடிகின்றது.
குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 வயது சிறுவன் ஒருவன் உட்பட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 38 வயதான கனதுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர், டிபென்டர் வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது அருகில் இருந்தவர்கள் தாக்கி தீ வைத்துள்ளனர்.
Tags:
sri lanka news