Wednesday 25 May 2022

இடைக்கால வரவு செலவு திட்டம் காரணமாக போராட்டங்கள் அதிகரிக்கலாம்..!!!

SHARE



ஆறு வாரங்களுக்குள் தமது அரசாங்கம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை "இரண்டு வருட" நிவாரணத் திட்டத்திற்கு திருப்ப அவர் உத்தேசித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் போராட்டங்களும் அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தப் போராட்டங்கள் தேவையற்ற மோதலாக மாறாது என்று அரசாங்கம் நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

22 மில்லியன் மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரூபாயின் வருமானம் சரிந்து விட்டதால் இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அச்சடிக்க வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, ஆண்டு பணவீக்கம் 40% ஆக உயரக்கூடும் என்று அவர் தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்நாட்டுச் செலவுகள் கடுமையாக அதிகரிக்கக்கூடும்.

இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக இருந்ததாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று (24) அறிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் எரிபொருள் விலையை அரசாங்கம் நேற்று மீண்டும் அதிகரித்தது. இதன் விளைவாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பேருந்துக் கட்டணம், முச்சக்கர வண்டிக் கட்டணம், உணவுச் செலவுகள் என அனைத்தும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
SHARE