Wednesday 25 May 2022

பஸ் கட்டணம் அதிகரிக்கும் விதம் : இன்றும் கேஸ் இல்லை..!!!

SHARE



நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேருந்து தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா தெரிவித்தார்.

இதன்படி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவிலிருந்து 32 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரை சொகுசு பேருந்துகளின் அதிகபட்ச பேருந்து கட்டணம் 4,025 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சாதாரண சேவைகளுக்கான அதிகபட்ச பேருந்து கட்டணம் 2,417 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (25) எந்தவொரு வீட்டு சமையில் எரிவாயு சிலிண்டர்களையும் விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
SHARE