மூன்று வாகனங்கள் மோதி விபத்து - இளைஞன் பலி..!!!




சிறிய ரக லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல பாதகட பிரதேசத்தில் நேற்று (24) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி நோக்கி பயணித்த சிறிய ரக லொறி அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதனையடுத்து லொறி, முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் நிக்கவெரட்டிய மீவெல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த பெண் ஒருவரும் குழந்தையும் பலத்த காயங்களுடன் பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எம்பிலிபிட்டிய - மெரகெட்டிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கொட்டவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகொல்ல மஹா உஸ்வெவ வீதியில் பலுகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் சாரதி உஸ்வெவ நோக்கி பயணித்த போது, ​​அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


இதேவேளை, கெக்கிரிவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ கெக்கிராவ பிரதேசத்தில் காரொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – புத்தளம் வீதியில் தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here