எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ நிறுவனம்..!!!


உள்நாட்டு எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யவதற்கு தேவையான உள்நாட்டு எரிவாயு கையிருப்பில் இன்மையால் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, லிட்ரோ எரிவாயு இறக்குமதிக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் எதிர்வரும்13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்
Previous Post Next Post


Put your ad code here