எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக விசேட தேவையுடையவர்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
Tags:
sri lanka news