உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு..!!!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 8,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும், பஸ்கள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here