
சசி வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நாளைய தினத்திற்கு (31) கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை விளக்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதவான் அமரசிங்க அழைப்பானை விடுத்துள்ளார்.
சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த தண்டனைக்கு எதிராக சசி வீரவன்சவின் சட்டத்தரணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news