Tuesday 21 June 2022

இந்த வார ராசிபலன் 20.06.2022 முதல் 26.06.2022 வரை..!!!

SHARE

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கப்போகின்றது. கடந்த வாரம் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் கூட இந்த வார இறுதிக்குள் சரியாகிவிடும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பெரியதாக பிரச்சினைகள் எதுவும் இருக்காது. உங்களுடைய வேலைகளை மட்டும் கொஞ்சம் முன்கூட்டியே கவனத்தோடு செய்வது நல்லது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அலசி ஆராயாமல் அதில் காலடி எடுத்து வைக்கக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். மற்றபடி கமிஷன் சம்பந்தப்பட்ட தொழில் நல்லபடியா லாபத்தை கொடுக்கும். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அவர்களுடைய வேலையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர் செய்த தவறுக்கு கூட உங்கள் மேல் பழி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால் எதிலும் பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிறது. அவசரப்பட்டு யாரிடமும் வார்த்தையை விட்டு விடக்கூடாது. எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் பணிந்து போகக்கூடிய காலம் இது. வேலை செய்யும் இடத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள். மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். அவசரப்பட்டு வேலையை விடவேண்டும் என்ற முடிவுக்கும் வரவேண்டாம். பொறுமை காப்பது நல்லது. பூர்வீக சொத்து வழக்கு உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவியிடையே சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினமும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் கோபப் படக்கூடாது. யாரை நம்பியும் யாருக்கும் வாக்கு கொடுத்த கூடாது. வாக்கு கொடுத்து விட்டால் அதை நிறைவேற்ற பெரிய போராட்டமே நடத்த வேண்டி இருக்கும். எதையும் நின்று நிதானமாக யோசித்து செயல்படுங்கள். புதிய முதலீடு செய்ய வேண்டாம். அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த வாரம் 20, 21 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. கவனம் தேவை.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் தேடி வரும். சொந்தத் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். ஆனால் உங்களுடைய குடும்ப விஷயங்களில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளிடம் ரொம்பவும் கண்டிப்பாக இருக்காதீர்கள். கொஞ்சம் பாசத்தை காண்பியுங்கள். மேல்படிப்புக்காக முயற்சி செய்யும் மாணவர்களுக்கு எல்லாம் நன்மையே நடக்கும். எல்லாம் சரியாக இருந்தாலும் சின்ன மனசஞ்சலம் உள்ளுக்குள்ளே உறுத்திக்கொண்டே இருக்கும். தினமும் காலையில் எழுந்து சிவ பெருமான் வழிபாடு செய்வது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெரிய அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எதிர்பாராத நல்லது நடக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டையும் புகழையும் பெறுவீர்கள். யாருக்கும் பயப்படாமல் சில இடங்களில் சில முடிவுகளை எடுத்து அசத்துவார்கள். பேச்சுத் திறமையால் எதிராளியின் வாயை மூடி விடுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஐடியாக்களை அறிமுகப் படுத்த போகிறீர்கள். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு இரட்டிப்பாகும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். புதிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். அப்படியில்லையென்றால் பெரியவர்களிடம் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சுக்கு ஒரு மரியாதை இருக்கும். உங்கள் மேல் அதிகாரியும், நீங்கள் சொல்லுவதை கேட்டு நடப்பார்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையாக செயல்பட்டால் நீங்கள் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும். சில நேரங்களில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் செய்யும் வேலையில் கவனம் தேவை. எந்த வேலையையும் அலட்சியமாக செய்யக்கூடாது. கூடுமானவரை சோம்பேறித்தனத்தை தள்ளிவைத்துவிட்டு, நாளைக்கு தேவையான வேலையை இன்றே முடித்து வையுங்கள். கடின உழைப்பு பெரிய வெற்றியை கொடுக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டும் புகழும் தேடி வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூகமான சூழ்நிலை நிலவும். புத்திசாலித்தனத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் கழுதையாக கத்தினாலும் உங்கள் பேச்சைக் கேட்பதற்கு ஆள் இருக்காது. நீங்கள் நல்லதே செய்தாலும் அது மற்றவர்களுடைய கண்ணுக்கு தவறாகத்தான் தெரியும். அதனால் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று கவனமாக இருந்து கொள்ளுங்கள்‌. அனாவசியமாக பேசாதீங்க. மௌன விரதம் இருப்பதாக நினைத்துக்கொண்டு யார் என்ன கேட்டாலும் தலையை மட்டும் ஆட்டி பதில் சொல்லுங்கள். சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. வியாபாரத்தில் சிக்கல் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் போட்டிகளும் பொறாமையும் நிறைய இருக்கும் கொஞ்சம். கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தினம்தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கைநிறைய பணம் கிடைக்கப் போகின்றது. வாராக் கடன் வசூலாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த எல்லா காரியமும் இனிமேல் கடகடவென நடக்கத் தொடங்கும். சொந்தத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். கிடைக்காத ஒப்பந்தங்களில் கூட கையெழுத்துப் போட்டு சாதிப்பீர்கள். உறவினர்களிடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் வாக்குவாதம் என்று வந்தால் யாராவது ஒருத்தர் வாயை மூடிக் கொள்ளுங்கள். காதல் கைகூடும். திருமணம் நடைபெறும். கூடுமானவரை யாரையும் நம்பி யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. வாக்கை நிறைவேற்றாமல் போனால் அவமான படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவான வாரமாக இருக்கப்போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். சந்தோஷமாக வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்‌. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். யாரை நம்பியும் நிறைய பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். சேமிப்பை செலவு செய்யாதீர்கள். யார் பேச்சைக் கேட்டும் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. பேராசை காட்டி உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது‌‌. சந்தோஷமாக வீட்டிற்காக பணத்தை செலவு செய்யுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வையுங்கள். மகிழ்ச்சி இரட்டிப்பாக போகின்றது. தினம்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் துணிச்சலான வாரமாக இருக்கப் போகின்றது. யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டீர்கள். உங்கள் இஷ்டம் போல நடப்பீர்கள். உங்கள் மனது சொல்வதை கேட்கப் போகிறீர்கள். மன தைரியத்துடன் நிறைய காரியங்களை சாதிக்க போகிறீர்கள். மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய நிறைய விஷயங்கள் நடக்கும். கணவன்-மனைவிக்கிடையே சின்ன சின்ன சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பயணங்களின்போது கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும் போது ஜாக்கிரதையாக இருங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளாதீர்கள். தினம் தோறும் ஸ்ரீராமஜெயம் சொல்லுவது நன்மை தரும்.

SHARE