வெள்ளவத்தை கடற்கரை வீதியில் நேற்று (20) காலை முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த யுவதி ஒருவர், அதனை நிறுத்தி விட்டு அருகில் இருந்த ஏரிஎம் இல் பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பியுள்ளார்.
பணத்தை எடுத்துகொண்டு அவர் திரும்புகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக வந்த இருவர் அவரிடம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த யுவதி வைத்தியசாலை செலவுகளுக்காக ரூபா 15,000 ரூவை வங்கியில் இருந்து எடுத்தபோதே அவரிடமிருந்து பணமும் ஏரிஎம் அட்டையையும் இவ்வாறு அபகரிக்கப்பட்டது.
இச்சம்பவம் இடம் பெற்றபோது அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்த போதிலும் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பணத்தை பறித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கொள்ளைச்சம்பவங்களும், வழிப்பறிகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.