ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் திங்கட்கிழமை தனது 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து கூடாரங்கள் அமைத்து, நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, அந்தப் பகுதியில் இராணுவத்தினர் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், போராட்டக்காரர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி இன்று பிற்பகல் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனமும் திட்டமிட்டுள்ளது.