இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய தினம் எரிபொருள் போக்குவரத்து இருக்காது எனவும், அதன்படி திங்கட்கிழமை வரை எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர வேறு பவுசர்களும் செல்லாது என சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
Tags:
sri lanka news