பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் அனிருத்..!!!


அட்லி படம் மூலமாக அனிருத் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

பாலிவுட்டில் இயக்குநர் அட்லி ஷாருக்கானை இயக்கும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 'ஜவான்' என இந்த படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அட்லி தனது ட்வீட்டில், 'எமோஷனலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உங்களை பார்த்து வளர்ந்த நான் இப்போது உங்களையே இயக்குகிறேன். இதை நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஷாருக்கான் சாரும் நானும் 'ஜவான்' படம் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த வருடம் 2023ல் ஜூன் 2ல் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது' என அறிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்துக்கு இசையமைக்கும் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் கனவு நனவாகி உள்ளது. பாலிவுட் பாட்ஷாவாகிய ஷாருக்கானுக்கு நான் இசையமைக்கிறேன். இதற்காக நான் நன்றியும் பெருமையும் என் சகோதரர் அட்லிக்கு தெரிவித்து கொள்கிறேன்.

இது நிச்சயம் எங்களுக்கு பெருமையான ஒன்று' என 'ஜவான்' பட அறிவிப்பு டீசரையும் வெளியிட்டுள்ளார்.

இடையில் அட்லி- ஷாருக்கான் படம் கைவிடப்பட்டது என தகவல் வந்தது. ஆனால், ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரைய்லர் வெளியான போது அட்லிக்கு மிக பிடித்த நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ட்ரைய்லரை அட்லியுடன் சேர்ந்து பார்த்ததாக ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் மூலம் அட்லி- ஷாருக்கான் படம் கைவிடப்பட்டது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் எனவும் இந்த படத்தின் கதாநாயகியான நயன்தாரா விசாரணை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு புனே உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் சுனில் குரோவர், சானியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்யன் கைது, ‘பதான்’ படப்பிடிப்பு ஆகியவற்றிற்கு பின்பு ஷாருக்கான் இப்போது மீண்டும் அட்லி படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார்.
Previous Post Next Post


Put your ad code here