Monday 27 June 2022

அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இனி இயங்கும் – அரசு விசேட அறிவிப்பு..!!!

SHARE

சுகாதாரம் , துறைமுகம் , உணவு சேவை போக்குவரத்து உட்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே இன்று நள்ளிரவு முதல் ஜூலை 10ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும்.இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடரந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 10ஆம் திகதி வரை சிபெட்கோ எரிபொருள் நிலையத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, நகர பாடசாலைகளுக்கு ஜூலை 10ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கும் கிராம பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
SHARE