அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு

 


பிரதேச செயலகங்கள் ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் காணி பதிவு சேவைகள் எதிர்வரும் 10 நாட்களுக்கு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த தினங்களில் காலை 8.30 முதல் பிற்பகல் 4.00 வரை இந்த சேவைகள் இடம்பெறவுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பதிவாளர் திணைக்களத்தின் பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் அமைந்துள்ள கிளை அலுவலகம் மற்றும் குருணாகலை, கண்டி, மாத்தறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கிளை அலுவலகங்கள் உரித்தான பிரதேச செயலகங்களின் மாவட்ட பதிவாளர் பிரிவு வாரத்தின் 5 நாட்களுக்கு வழமை போல இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அனைத்து வாரங்களிலும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் தபால் மற்றும் உப தபால் நிலையங்களை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here