
தெரணியகல, பொரங்கட பிரதேசத்தில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு ஒன்றின் போது ஏற்பட்ட மோதலில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதான இவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news