
வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட கொவிட்-19 காப்புறுதி திட்டத்தை நீக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த காப்புறுதி திட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எழுத்துமூல அறிவித்தல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Tags:
sri lanka news