கரடி துரத்தியதில் காணாமல் போன இளைஞன் கண்டுபிடிப்பு..!!!




முள்ளிப்பொத்தானையில் கரடி துரத்தி காட்டில் சென்ற இளைஞன் 3 நாளைக்கு பின் நேற்று (18) மாலை மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஈச்சநகர் காட்டில் காணாமல் போன இளைஞனை இராணுவத்தினரும், பொலிஸார் மற்றும் பொது மக்களும் சேர்ந்து இளைஞனை மீட்டுள்ளார்கள்.

முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக போனவர்களை தேடி தனியாக சென்ற இளைஞன் கரடி துரத்தியதால் வழிதவறி காட்டில் சென்று இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்ததாகவும் குறித்த நபர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (16) காணாமல் போயுள்ள நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

தம்பலகாமம், யூனிட் 10, 806 இல் வசிக்கும் 23 வயதுடைய சனூன் மொகமட் ரிஸ்வான் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here