பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசலை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் யாழை சேர்ந்த ஆய்வு கூட உதவியாளர்..!!! (Video)


இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்யமுடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்தார்.

நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் எனும் ஆய்வு கூட உதவியாளர் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டினார்.

இதன்போது தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் ,சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாக தயாரிக்க முடியும் எனவும் அதேபோன்று நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளை பயன்படுத்தி பயோ பெற்றோலினை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

இதற்கான தயாரிப்பு மாதிரி செய்முறை விளக்கமும் அவரால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. பயோ டீசலினை சாதாரணமாக வீட்டினிலேயே செய்யமுடியும் எனவும் ,பயோ பெற்றோல் தயாரிப்பதற்கு சுமார் 50 மில்லியன் முதலீடு தேவைப்படும் எனவும் இதற்கு அனுசரணையாளர்களும் அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிபொருளினை மிக குறைந்த விலையில் உற்பத்திசெய்து எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார்.

Previous Post Next Post


Put your ad code here